தமிழ் இலக்கியத்தை புதிதாய் படிக்க ஆரம்பித்திருக்கும் ஒரு மாணவன்.

சங்கத் தமிழுடன் பிள்ளையார் சுழி.

அப் பாடல்களை இக்காலத்துக்கு பொருத்திப் பார்க்கும் குழந்தையின் கிறுக்கல்கள் போன்ற ஒரு முயற்சி இது. பாடலை வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை புரிந்து செய்த செயல் அல்ல. கவிதையின் வடிவத்தை சுமாராக புரிந்து கொண்டு கதை வடிவில்  பொருத்திப் பார்க்கிறேன். குழந்தைகள் சொல்லும் ராமாயணம் போல, தப்பும் தவறுமாய், ஆனால் உண்மையான ஆர்வத்தோடு.

இலக்கியம் மூலம் தமிழ் நாகரிகத்தை, பண்பாட்டை அறிந்து கொண்டாட ஆசை. A.K. ராமனுஜன் சொன்ன மாதிரி “Even one’s own tradition is not one’s birthright; it has to be earned, repossessed”.   

எனது பிறப்பு உரிமையை மீட்டெடுக்கும் கனவோடு.

“பெரிதினும் பெரிது கேள்”

என்ற மகாகவிக்கு மனமார்ந்த நன்றிகளோடு.

Print Friendly, PDF & Email
பகிர்ந்து கொள்ள