அகநானூறு – பாடல் 86

நல்லாவூர்க்கிழார் எழுதியது.

அகநானூற்றுப் பாடல்களில் பழைய திருமணச் சடங்குகளை சொல்லும் பாடல்கள் இரண்டு இருக்கின்றன. இரண்டு பாடல்களிலும் ஐயரோ, நெருப்போ இல்லை. ஒரு பாடல் மட்டும் கடவுளை கும்பிட்டதாக குறிக்கிறது. ஆனால் கடவுள் பெயர் இல்லை. தாலி இல்லை.

ஆனால்,  நல்ல நாள் பார்ப்பது, புதுத் துணி உடுப்பது, உற்றார், உறவினர் வருவது எல்லாம் இருக்கிறது.

மேலும் முக்கியமான இரண்டு விஷயம்:

ஒன்று – உணவு. இரண்டு பாடல்களுமே உணவின் சிறப்பை சொல்லித்தான் ஆரம்பிக்கின்றன. இரண்டாவதாக, முதல் இரவு. இரண்டிலும் மென்மையான உறவின் ஆரம்பமாக, முதல் இரவின் வர்ணனை. அதிலும் மூதெயிநநார் எழுதிய 186 ஆம் பாடல். மணிரத்தினத்தின் ரோஜா படம் போல் விரிகிறது. அதைப் பிறகு ரசிக்கலாம்.

நல்லாவூர்க்கிழார் எழுதிய இந்தப் பாடல் திருமணச் சடங்குகளை விரிவாக வர்ணிக்கிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் இவ்வளவு அர்த்தமுள்ள சடங்குகளை உருவாக்கி அதைக் கவிதையிலும் எழுதத் தெரிந்த நாகரீகத்தில் வாழ்ந்தவர்கள் நமது முப்பாட்டனும் முப்பாட்டியும் என்ற பெருமையுடன் நம் கற்பனையையும் சேர்த்து இக் கவிதையை ரசிக்கலாம்..

பாடலுக்கு தெளிவுரை விரிவுரை என்று போரடிக்காமல்,  இக் காலத்திக்குப் பொருத்திப் பார்க்கும் குழந்தையின் கிறுக்கல்கள் போன்ற ஒரு முயற்சி இது. பாடலை வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை புரிந்து செய்த செயல் அல்ல. கவிதையின் வடிவத்தை சுமாராக புரிந்து கொண்டு கதையில் சொல்லும் முயற்ச்சி. குழந்தைகள் சொல்லும் ராமாயணம் போல, தப்பும் தவறுமாய் ஆனால் உண்மையான ஆர்வத்தோடு

———————————————————————————————-

“ஏய் என்ன சந்தோஷம்தானே?” புதுப் புடவையில் வித்தியாசமாய் தெரிந்தாள். கட்டில் முழுவதும் பூக்கள். முதுகு காட்டி உட்கார்ந்து இருந்தாள். முதுகு சிறு குலுங்கலுடன். அழுகிறாளா? சிரிக்கிறாளா?”

how to download free porn for psp கொடும் புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்து

https://kutabalinews.com/online-roulette-for-iphone-qv86yc/ ஒடுங்கினள். கிடந்த ஓர் புறம் தழிஇ.

லண்டனில் பிறந்த காதல் இப்பொழுது சிறுமனங்குடியில் தலை நாள் இரவில் வந்து சேர்த்திருக்கிறது.

நாகப்பட்டினத்தில் வளர்ந்த பெண். கார்கார்த்த வெள்ளாளர். லண்டனில் படித்ததும் வேலை.

பரம்பரையாய் வட நாட்டில் வாழ்ந்து இரண்டு தலை முறையாய் இங்கிலாந்தில் வசிக்கும் பிராமணப் பையன். இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறை. பெண்ணின் தாத்தா சிறுமனங்குடிப் பண்ணையார். அவர் கிராமத்தில் அவர்கள் முறைப்படி தான் தன் ஒரே பேத்தியின் கல்யானம் நடக்க வேண்டும் என்ற பிடிவாதம். உடனே ஒப்புக் கொண்டான்.

காவிரிக் கரை கிராமம். பாதித் தெருவை அடைத்த அரண்மனை போன்ற வீடு. மீதி தெருவையும் அடைத்து பந்தல். பந்தல் முழுவதும் பட்டாய் காவிரி மணல்.

தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி

விடியும் முன் ஆரம்பித்த சடங்குகள். பந்தல் முழுவதும் அவர்கள் குடும்பத்து பழைய விளக்குகளின் அணி வரிசை. எங்கும் தொங்க விடப் பட்டிருந்த மாலைகள்.

மனை விளக்குறுத்து மாலை தொடரிக்
கனை இருள் அகன்ற கவின் பெறு காலைக்

தாத்தாவுக்கு ஜோடிதப் புலமை வேறு. ரோகிணி நட்சத்திரம் தான் வேண்டும். அதுவும் வளர் பிறையில். லீவு கிடைக்க பெரும் பாடு.

கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்
கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென

எளிமையான சடங்குகள். முதலில் காவிரி நீரைக் குடங்களில் சுமந்து வயதான பெண்கள் வந்தனர். பின்னால் கைகளில் அரிசி பருப்பு என பலவும் ஏந்தி சிலர். ஒவ்வொன்றாய் பெண்ணின் கையில் கொடுத்தனர். தாத்தாவின் முறைப்பில் செல் போன்களும், வீடியோக்களும் தூரப் போயின.

உச்சிக் குடத்தர் புத்தகன் மண்டையர்

முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தரப்

அமைதியான அன்பான சிரித்த முகத்துடன் பெண்களே சடங்குகள் அனைத்தும் செய்தனர்.

பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்

அவர்களில் சமீபத்தில் தாயான நாலு பெண்கள் முன் வந்து சட்டென்று முழுக் கூட்டமும் அமைதியாக,

“நல்லா இருங்கப்பா. கற்போடு இருங்கள் ஒருவருக்கு ஒருவர் துணையாய் இருங்கள். முடிந்த வரை எல்லோருக்கும் உதவுங்கள்” என்று வாழ்த்தி முடித்ததும் இசை தொடங்கியது.

வால் இழை மகளிர் நால்வர் கூடிக்
கற்பினின் வழாஅ நற் பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக என

ஒரு அழகிய குடம். பூவும் நெல்லும் சேர்ந்த காவிரி நீர். குளிர்ந்த நீர் தலையில் பட்டதும் நடுங்கிப் பின் சிரித்த அவள் முகம். வாழ்க்கையின் ஆரம்பத்தில் மறக்க முடியாத கணம்.

நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
பல் இருங்கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன் மணம் கழிந்த பின்றைக்

திருமணம் முடிந்தது. பின் சிரித்த முகத்துடன் ஆரவாரமாய் சொந்தங்கள். ஒருவர் பின் ஒருவராய் “பேரும் புகழும் பெற்று வாழ” வாழ்த்தினர்.

கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து
பேர் இற் கிழத்தி ஆக எனத் தமர் தர

நல்ல அரிசியும் உழுந்தும் குழைத்து வடித்த பொங்கல். இட்லி, பணியாரம் என பந்தி பந்தியாய் உணவு.

உழுந்து தலைப்பெய்த கொழுங்கனி மிதவை
பெருஞ்சோற்று அமலை நிற்ப நிரை கால்

அதற்குப் பின் இப்பொழுது தான் பார்க்க முடிகிறது. பெரிய ரூம். கட்டில். பூ. முதல் இரவு. தாத்தா அவர் திருமண நினைப்பில் அவரே செய்த ஏற்பாடு. அவள் காதில் கம்மலோடு பெரிய சிவப்பு தோடு.

ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல்

செஞ்சூட்டு ஒண் குழை வண் காது துயல் வர

“ஏய். என்ன சந்தோசம் தானே! திரும்பு” திரும்பியவளின் கண்களின் ஓரத்தில் கண்ணீர். முகம் முழுவதும் வெட்கம் கலந்த புன்முறுவல்.

“ஏய்…. என்ன?” மென்மையாய் நெற்றியில் முத்தமிட்டான்.

பதில் சொல்லாமல் தலை குனிந்தாள்.

நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை என
இன் நகை இருக்கை பின் யான் வினவலின்

அகமலி உவகையள் ஆகி முகன் இகுத்து
ஒய்யென இறைஞ்சியோளே 

“என்னடா? அதிசயமா வெட்கப் படறே?”.. பெருமையாய்ப் பார்த்தான்.

மதைஇய நோக்கின்

சட்டென்று தலையை உயர்த்தி உதட்டில் அழுத்தி முத்தமிட்டாள். “ரொம்ப சந்தோஷமா இருக்கேன்டா! தேங்க்ஸ்”.

“எனக்கு ஒரு சந்தேகம். ஏன் இந்த ஐயர், மந்திரம் எல்லாம் இல்லே?”

“புரியாத பாஷைலே மந்திரம் எதுக்கு?” காதில் அணிந்த கம்மல் முகம் தொட அவன் மேல் சரிந்தாள்.

“எல்லோருக்கும் தெரிஞ்ச,  புரியற பாஷை கத்துத் தரேன். வா” என்றாள்.

கண்கள் பேசின. கண்கள் மட்டும் பேசவில்லை என்று கட்டில் பேசியது – நாகை ஆனந்தன்

Print Friendly
பகிர்ந்து கொள்ள

Leave a Reply