அகநானூறு பாடல் – 203

levitra viagra viagra price கபிலர் எழுதியது.

தாய் தன் மகளை நினைத்து புலம்பும் கவிதைகள் அகநானூறில் நிறைய உள்ளன. “எப்படி வளர்த்தோம்?, அவனுடன் போய் விட்டாளே, எப்படி கஷ்டப்படப் போகிறாளோ” என்ற வகையில் புலப்பமும். கோபமும், வருத்தமும், ஆற்றாமையும் தெறிக்கும் கவிதைகள்.

இந்தத் தாய் கொஞ்சம் வேறுபட்டு தெரிகிறாள்.

go to site யான் sales online viagra sale அன்னேன் அன்மை நன் வாய்யாக click here (நான் அப்படிப் பட்ட அம்மா இல்லே)”

தமிழ் நாகரிகத்தின் தொடர்பு சங்கிலிகள் இப்பாடலில் புதைந்து கிடக்கின்றன. நம் நாகரிகத்தின் விரும்பத் தகாத சில கூறுபாடுகள், தலைமுறைகளின் எச்சமாய் நம் மீது எளிதில் கழுவ முடியாத படி இன்னும் படிந்துதான் உள்ளன

********************

மகள் சுகந்தியைக் காணவில்லை. எழுந்து காப்பியுடன் போய் பெட்ரூமைத் தட்டியவுடன், கதவு தானாக திறந்து கொண்டது. உள்ளே அவள் இல்லை. ஒரு suitcase – எப்போதும் இருக்கும் இடத்தில் – அதுவும் இல்லை.

தாயின் முகத்தில் தவிப்பு சிறிது நேரமே நிலைத்து. நிம்மதிப் பெருமூச்சுடன் கதவில் சாய்ந்தவளின் முகத்தில் கண்ணீருடன் சேர்ந்த புன்னகை.

********************

“ஓம் பொண்ணை இன்ஜினியரிங் வரைக்கும் படிக்க வச்சிருக்கே. சீக்கிரம் கல்யாணம் பண்ற வழியை பாரு. காலம் கெட்டு கிடக்கு. எங்கடா நல்ல ஜாதிப் பொண்ணு கிடைப்பாங்கன்னு அலையறானுங்க”. கணவனின் தங்கையிடமிருந்து கேட்காமல் உபதேசம்.

அவள் அண்ணனும் நல்ல ஜாதிதான்.

இருக்கும் வரை குடியும் அடியுமான வாழ்க்கை.

விரக்தியும் வலியும் ஜாதி பார்த்து குறைந்து போகவில்லை.

kamagra generic viagra uk தீ வாய்
generic pack sample viagra அலர் வினை மேவல் அம்பல் பெண்டிர்

********************

“அம்மா எனக்கு வேலை கிடச்சிருக்கு. டெல்லி. Juneலே காலேஜ் முடிஞ்சோன்ன join பண்ணனும். நீயும் என்கூட வந்திரு” சுகந்தி சாப்பிட்டு கொண்டே சொன்னாள்.

அம்மாவுக்கும் மகளுக்கும் பேச்சு குறைவு. தந்தை இல்லாமல் அவளை வளர்க்க சொந்த ஜாதி ஜனங்களை நம்பிய அம்மா.

பெரிய உதவி ஏதும் செய்யாவிட்டாலும், அவர்களின் முரட்டு ஜாதிப் பெருமை பிடிக்காத மகள்.

இடைவெளி மெதுவாக வளர்ந்தது.

******************

“அம்மா… “ வரும் போதே என்றும் இல்லாத சத்தம்.

“டிவி பார்த்தியா? நடு ரோட்லே வெட்டி போட்டுருக்காங்க. உங்க ஊர்தான். உன் கூட்டம்தான்.  என்ன தப்பு செஞ்சா அந்தப் பொண்ணு? பிடிச்ச பையன் கூட வாழ்வேன் சொன்னது தப்பா? ஓடி போக மாட்டேன்.. சொந்த ஊர்லேயே இருப்பேன்னு இருந்தாளே! அது தப்பா? புது வேலை கிடைச்சிருக்குன்னு சந்தோஷமா டிரெஸ் எடுக்க வந்த அவ கண் முன்னாலேயே வெட்டிருக்காங்க”

டிவியில், திரும்பத் திரும்ப நாள் முழுவதும் பார்த்த செய்தி.

வெட்டியவர்கள் அவள் தூரத்து சொந்தம்.

“சரி சரி.. சாப்பிட வா. நான் என்ன சொல்ல? தப்பு சரி ஆண்டவனுக்கு தெரியும்”

சொந்த விருப்பு வெறுப்புகளை குடிகாரக் கணவனின் அடியில் தொலைத்த அம்மா.

தனியாய் மகளை வளர்க்கும் தவிப்பும், பிறந்த ஜாதியின்  நினைப்பும், சொந்த பந்தங்களின் மதர்ப்பும் மூடிப் போட்ட அவள் வாய்.

கண்ணம்மாவை காதலியாய் நினைத்து உருகிய முண்டாசுப் புலவனை ஆராதிக்கும் மகள் – “ரௌத்திரம் பழகு” அவள் அவனிடம் படித்தது, தாயிடம்  அதை எதிபார்த்து ஏமாந்தாள்

“நானும் காதலிக்கறேம்மா.. “ என்ற வார்த்தைகள் வாயை விட்டு வெளி வரவேயில்லை.

get link யான் இவ் வறுமனை ஒழிய தானே cost of viagra
http://freebasstranscriptions.com/?q=discount-generic-viagra-soft-tabs அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை get viagra free sample
எனக்கு எளிது ஆகல் இல் எனக்

******************

“பைக்லே உன் பொண்ணு.. முகத்தை கூட மூடாம என்ன திமிராப் போறா. என்னைப் பார்த்து கொஞ்சம் பயந்து மறச்சுப்பான்னு பார்த்தா, கையை எடுத்து அவன்   இடுப்பை கட்டிக்கிட்டு போறா” மீண்டும் கணவனின் தங்கை.

குழந்தை இல்லா வாழ்க்கையின் வன்மம் வார்த்தையில் தெறித்தது

“இந்த அக்கறை நான் ரோட்லே அடி வாங்கி கிடக்கும் போது ஏன் வரல? நல்லோதோ கெட்டதோ. எனக்கும் என் மகளுக்கும் உள்ளது. நீங்க இதுலே தலையிட வேண்டாம்” தொண்டை வரை வந்த வார்த்தைகள் பட்ட அடி உதைகளின் நினைவுகளின் அதிர்வில் அடங்கிப் போயின. “அவ வந்தா கேட்கறேன் அக்கா”.

உவக்குநள் ஆயினும் உடலுநள் ஆயினும்
யாய் அறிந்து உணர்க என்னார் தீ வாய்
அலர் வினை மேவல் அம்பல் பெண்டிர்

அடுத்து அடுத்து பலர் வந்து சொன்ன செய்திகள். உண்மையான அக்கறை இல்லா வார்த்தைகள்.

“நம்ம ஜாதிலே பையங்க இல்லே??. படிச்ச திமிரு சிவப்பு தோலு கேட்குது. ” காதில் விழட்டும் என்று சொன்ன குரல்கள். “ஒன்னு ரெண்டு பேரை வெட்டிப் போட்டாதான் திருந்துவாளுக”.

இன்னள் இனையள் நின் மகள் எனப் பல் நாள்

ஒரு நாள் அவள் கைப்பேசி அழைப்பில் மின்னிய புகைப்படத்தில் அவனைப் பார்த்தாள். சேர்ந்து எடுத்த selfie. பொருத்தமாய் இருந்தான். கண்களில் அத்தனை கனிவு.

கழல் கால் மின் ஒளிர் நெடு வேல் இளையோன் முன்னுற

அவள் மகளிடம் கேட்கவில்லை. கேட்டு அவள் காதலை தடுக்க நினைக்கவில்லை.

எனக்கு வந்து உரைப்பவும் தனக்கு உரைப்பு அறியேன்
நாணுவள் இவள் என நனி கரந்து உறையும்

******************

“அம்மா” வாசலில் குரல் கேட்டு கண்ணைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள். மகளின் சிநேகிதி.

“உள்ளே வா கீதா” சிநேகிதியின் ரகசியம் தாயிடம் மறைத்த குற்ற உணர்வு தடுக்க மெதுவாய் நடந்தாள் கீதா.

“எப்ப கல்யாணம்? எங்க வச்சு? நீ போலையா” நடுக்கம் இல்லாத குரல் கீதாவை உலுக்கிப் போட்டது.

“அம்மா,  என்னாலே உங்க கிட்ட சொல்லக் கூடாதுன்னு சொன்ன சுகந்தியை மீற முடியலே. அவங்க இப்ப கல்யாணம் பண்ணலே. டெல்லிலே வேலை ரெண்டு பேருக்கும். அவ ஒரு வீடு பார்த்திருக்கா. அவன் friends கூட இருக்கான். ஆறு மாதம் கழிச்சுத்தான் கல்யாணம்” பேசிக் கொண்டே கீதா பையில் இருந்து பணம் எடுத்தாள்.  “இந்த பணம் அவ joining போனஸ். உங்க கிட்ட குடுக்கச் சொன்னா”

பணத்தை வாங்கி உடைந்து அழுதவள் அமைதியாக நேரம் ஆனது.

“நான் அப்படிப் பட்ட அம்மா இல்லேம்மா” நீண்ட அழுகையின் ஊடே மீண்டும் மீண்டும் நனைந்து உதிர்ந்த வார்த்தைகள்.

தனக்கு யான்
அன்னேன் அன்மை நன் வாய்யாக

கீதா அவளை அணைத்து தேற்றினாள். “அவன் ரொம்ப நல்ல பையம்மா. ஒரே பையன். அவங்க வீட்டுலேயும் அவளைப் பொண்ணு மாதிரி கொண்டாடுறாங்க. உங்க ஜாதி பயம்தான்…..”

“உண்மையாவே நான் அவ எங்கேயாவது போய் நல்லா இருக்கணும்தான் வேண்டிக்கிட்டே இருந்தேன். ஆனா இப்ப அவ எப்படி தனியா கஷ்டப் படுவாளோன்னு உடைஞ்சு போயிட்டேன்.” அழுது முடித்தவள் “கீதா அவ அட்ரஸ் கொடேன். எனக்கு அவளைப் பார்க்கணும்” என்றாள்.

“அம்மா.. நீங்க எப்படி தனியா அங்க?.. அவ இந்த வாரம் அங்க இல்லே. Training போயிருப்பா”

“அட்ரஸ் கொடுப்பியா மாட்டியா?” கண்களில் உக்கிரத்தின் தொடக்கம். எழுதி வாங்கியவள் “அந்த தம்பிக்கு என்ன ஸ்வீட் பிடிக்கும்?” என்றாள்

******************

ட்ரைனிங் முடிந்து தன்னை கொண்டு விட வந்தவனுடன் வீட்டுக்குள் நுழைந்தாள் சுகந்தி.

கூட்டான் சோறும், சொதியும் சேர்ந்த வாசம். பஞ்சாபி குடியிருப்புகளின் நடுவே தனித்து மூக்கை துளைத்தது.

கையில் கேசரியுடன் கிச்சனில் இருந்து வந்த தாய், மகளை அவனுடன் பார்த்ததும் அப்படியே நின்றாள்.

பையெல்லாம் அவன் கையில்.

“உங்களுக்கு கேசரி பிடிக்கும்னு கீதா சொன்னா” என்ன சொல்லுவது என்று தெரியாமல் உளறினாள்.

அதிர்ச்சியும், ஆனந்தமும் தாக்கி அழுகையின் ஆரம்பத்தில் உறைந்த மகள்.

பையைப் போட்டு விட்டு, அவள் கை பிடித்து இழுத்து அவளுடன் அம்மாவின் காலில் விழுந்தான். தூக்கிய அம்மாவின் கைகளில் உடைந்து அழுதாள். எதுவும் பேசாமல் அவள் தலை நனைத்தாள் அம்மா.

ஆனந்தத்தை கொடுத்த அமைதியை கலைக்க விரும்பாமல் மெதுவாய் நகர்ந்து வெளியே வந்தான்.

வெளியில் நொச்சி மரத்தின் காற்று. உள்ளிருந்து கேசரியின் மணம்.

 புல்லென் மா மலைப் புலம்பு கொள் சீறூர்
செல் விருந்து ஆற்றித் துச்சில் இருத்த
நுனை குழைத்து அலமரும் நொச்சி
மனை கெழு பெண்டு யான் ஆகுக மன்னே.

******************

உவக்குநள் ஆயினும் உடலுநள் ஆயினும்
யாய் அறிந்து உணர்க என்னார் தீ வாய்
அலர் வினை மேவல் அம்பல் பெண்டிர்
இன்னள் இனையள் நின் மகள் எனப் பல் நாள்
எனக்கு வந்து உரைப்பவும் தனக்கு உரைப்பு அறியேன்
நாணுவள் இவள் என நனி கரந்து உறையும்
யான் இவ் வறுமனை ஒழிய தானே
அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை
எனக்கு எளிது ஆகல் இல் எனக் கழல் கால்
மின் ஒளிர் நெடு வேல் இளையோன் முன்னுறப்
பன் மலை அருஞ்சுரம் போகிய தனக்கு யான்
அன்னேன் அன்மை நன் வாய்யாக
மான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறி
வெய்து இடையுறாஅது எய்தி முன்னர்ப்
புல்லென் மா மலைப் புலம்பு கொள் சீறூர்
செல் விருந்து ஆற்றித் துச்சில் இருத்த
நுனை குழைத்து அலமரும் நொச்சி
மனை கெழு பெண்டு யான் ஆகுக மன்னே.

 

தாய் கூறுவதாக

துன்பமோ மகிழ்ச்சியோ அவள் அம்மாவே கேட்டு தெரிந்து கொள்ளட்டும் என்று விடமாட்டார்கள். கொடிய வாய் உடையவர்கள். புறம் கூறுவதிலேயே விருப்பம். அதுவே தொழில். “உன் பொண்ணு இப்படி. அவ ஒழுக்கம் அப்படி” என்று தினம் தினம் என்னிடம் வந்து சொல்வார்கள்.

கேட்டால் அவள் மனம் வருந்துமே என்று நான் என் மகளைக் கேட்கவில்லை. அவளோ தான் இங்கு இருந்தால், தன் வாழ்க்கை எளிதாக அமையாது என்று என்னை தனியே விட்டு விட்டு அவனுடன்  சென்று விட்டாள்.

கழல் தரித்த கால். கையில் மின்னும் வேல். அவன் பின்னால் கொடிய காடுகளைக் கடந்து மலைப் பாதையில் போகிறாள்.

உண்மையாகவே நான் அப்படிப் பட்ட தாய் இல்லை என்று காண்பிக்க வேண்டும். குறுகிய விலங்குகள் சென்ற பாதையில் செல்லும் அவர்களுக்கு எந்த துன்பமும் வரக் கூடாது.

அவளுக்கு முன்பே செல்வேன். பொலிவு இழந்த மலை சூழ்ந்த அந்த சிறிய ஊருக்குப் போவேன். நொச்சி மரம் சூழ்ந்த ஒரு வீடு பிடித்து, அவளுக்கு பிடித்த உணவு சமைத்து, அவர்களை அழைத்து,  இருத்திப் பார்த்துக் கொள்வேன். அவர்களுடனேயே வீட்டோடு இருப்பேன்.

Print Friendly
பகிர்ந்து கொள்ள

Leave a Reply