அகநானூறு – மயக்கும் உவமைகள் பாடல் 302

ஒரு செழிப்பான மழைப் பிரதேசம்.

செவ் வாழை மரங்கள்.

மரத்தடியில் ஒரு யானை தூங்குகிறது.

சில்லென்ற காற்று.

காற்றில் ஆடும் வாழை இலைகள்

அந்த யானைக்கு முதுகு வருடி விடுகின்றன.

******************

ஒரு பெண் சொல்லுவதாக இப் பாடல்.

எப்படியெல்லாம் இயற்கையை ரசித்து வாழ்ந்த மக்கள்.

நின்று கொண்டே தூங்கும் யானையின் முதுகு வருட உயரமாய், நீள இலைகள் கொண்ட செவ் வாழை தான் சரி.

தன் காதலன் வாழும் ஊரில் கேட்காமலேயே விலங்குகளுக்கு கூட இந்த சுகங்கள் கிடைக்கின்றன
என்று நினைப்பதாக உட் குறிப்பு.

அதைப் புரிந்து கொண்டால் இவ் உவமை இன்னும் இனிக்கும்.

சிலம்பில் போகிய செம்முக வாழை
அலங்கல் அம் தோடு அசைவளி உறு தொறும்
பள்ளி யானைப் பரூஉப்புறம் தைவரும்

அகநானூறு 302, மதுரை அறுவை வாணிகன் இள வேட்டனார்

******************

அகன்ற முதுகிற்கும் வருட
வாழை இலை தரும்
அத்தானின் காடு.

மாதங்கம் மதியம்
நின்றே உறங்க,

பரந்த முதுகுகெண்ணி
படுத்தும் உறக்கம் இல்லை
என்றாள் தலைவி

– நாகை ஆனந்தன்

Print Friendly
பகிர்ந்து கொள்ள

Leave a Reply