சிக்கன்குனியாவின் நன்மைகள்

follow url சிக்கன்குனியா என்னும் சிகரத்தை வெற்றிகரமாக ஏறி இறங்கினேன்.

http://changtengyuan.com/?q=best-sites-to-buy-viagra-online-uk முதல் நாள் இரவு எல்லா முட்டுகளிலும் கடினமான வலி. இரண்டாவது நாள் காய்ச்சலும் சேர்ந்து கொண்டது.

discount viagra sale online மனைவி டாக்டர் சித்தப்பாவுக்கு போன் செய்தார். நல்ல தமிழ் பிடித்த அருமையான மருத்துவர்.

purchase viagra in us no prescription “Jointsலே வலி இருந்து காய்ச்சல் வந்தா சிக்கன் குனியாவா இருக்கலாம். Dolo-650 வாங்கிக் கொடு. நிறைய juice கொடு. ரெஸ்ட் எடுக்கட்டும்” என்றார்.

viagra internet sales காய்ச்சலும் வலியும் மிதமாகத் தான் தெரிந்தது.

http://freejobseeker.com/?q=purchase-viagra-on-line “ஆகா  இந்த குனியா இவ்வளவுதானா! ஜாலியாய் நாலு நாள் ரெஸ்ட் எடுப்போம்” மனதில் குஷி.

http://chennaitrekkers.org/?q=buy-viagra-in-canada-online மனதுக்கு பிடித்த புத்தகங்களை படுக்கையில் பரப்பினேன். ராசாவின் பாடல் ஓடத் தொடங்கியது. மாதுளம் juice பெட்ரூமுக்கே வந்தது.

enter site “ஆத்துலே ஆப்பிள் இல்லையா”

click here “ரொம்ப overஆ பண்றோமோ” என்று மனதில் பீதி அடித்தாலும், வெளியே “இவ்வளுவுதான் குனியாவா” என்று வாய் அலட்சியம் செய்தது.

here குனியாவுக்கு கோபம் வந்திருக்க வேண்டும். தலைப்பை உதறி இடுப்பில் சொருகி, கொண்டையிட்ட கூந்தலை விரித்து உதறி மீண்டும் எடுத்து சொருகியது தெரிந்தது.

“யாருகிட்டே…”

அடுத்த 48 மணி நேரம் தெர்மோ மீட்டர் 101க்கும்,   104க்கும் நடுவே தாண்டவமடியது.

இரண்டவாது நாள் 105 தாண்டி காட்டியது. டாக்டர் சித்தப்பா “nightlல தெர்மோமீட்டர் ஒன்னு இரண்டு degree கூட காட்டும்” என்று தைரியம் சொன்னார்.

கண்கள் திறந்து இருக்கும் போதே கனவுகள் வந்தன.

சாவித்திரி, பானுப்ரியா, சிம்ரன் மூவரும் சேர்ந்தே வந்தனர். சாவித்திரி தென்னை மரக் கீற்றை பிடித்துக் கொண்டு “மாலையில் யாரோ மனதோடு பேச” என்று பாட, சிம்ரன் “கோழி கூவும் நேரம் ஆச்சு. தள்ளிப் போ மாமா” என்றார்.

நகரவே முடியலே. எங்க போக!

பானுப்பிரியா பாடுவதற்கு முன் காய்ச்சல் கண்களை மூடியது.

உடம்பை ஆம்னி பஸ்ஸின் கடைசி சீட்டில் உட்கார்ந்தது போல் தூக்கி புரட்டி ரண களம் ஆக்கியது காய்ச்சல்.

அம்மா முன் அமைச்சர்கள் போல் உடம்பு வளைந்தே நடந்தது.

“அந்த பயம் இருக்கட்டும்” என்று சொல்லிவிட்டு மூன்றாவது நாள் காய்ச்சல் விடை பெற்றுக் கொண்டது.

இன்னும் வலி முழுவதுமாக விடவில்லை.

இதில் நன்மைகளும் இருந்தன.

  1. Office மற்றும் பார்ட்டிகளில் “Once upon a time, when I had chicken guniyaa” என்று நீட்டி முழக்க ஒரு மேட்டர் சிக்கியது.
  1. கம்பனியில் quarter-end. காலில் அடிபட்டு உலகப் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாட முடியாமல் போன காப்டன் போல கம்பெனியில் எல்லோருக்கும் “Come on Team. Ten more days to go. Let us play hard and win this quarter. I am there in spirit” என்று போட்ட ஈமெயிலுக்கு நல்ல response.
  1. “I am down with viral fever – most likely ChickenGuniya. So, apologies for delays” என்று out-of-office message வைத்தேன். Escalation என்று கடித்து குதற வந்த கஷ்டமர் கூட – “Take care. Get well soon” என்று பம்மி விலகினார்கள்.
  1. மனைவி தன் கையாலேயே தயிர் சாதம் பிசைந்து கணுக்கைகள் மடக்க முடியாததால் அவளே ஸ்பூனால் ஊட்டி விட்ட பாக்கியம் கிட்டியது. தேவாமிர்தம். “துன்பம் இன்றி இன்பம் இல்லை. புரிகிறதா பிள்ளாய்” என்று சிரித்தார் பெரிய பெருமாள். அவருக்கென்ன!. இந்த வருடம் காவிரி கொஞ்சம் சீக்கிரமே வந்து அவர் காலை நனைத்த சந்தோசம். “புரிந்தது பெருமாளே . நீர் இன்னும் பல்லாயிரம் ஆண்டு காவிரி கால் நனைக்க அங்கேயே படுத்து கொண்டு இரும்” என்று வாழ்த்தினேன்.
  1. இனிமேல் கடிக்க வரும் எந்தக் கொசுவையும் வடிவேலு பாஷையில் “யாருன்னு நினைச்சு மோத வர? குனியாவே மூணு நாள் வச்சு அடிச்சுட்டு முடியலேன்னு போயிட்டான். நீ எல்லாம் எனக்கு மூட்டை பூச்சி மாதிரி. நசுக்கிட்டு போய்ட்டே இருப்பேன்” என்று தைரியமாய் முறைக்கலாம்.

பின் குறிப்பு :

சிக்கன் குனியாவுக்கும் – கோழிக் குஞ்சுக்கும் என்ன தொடர்பு என்று ஆராய்ந்து கமெண்ட் தட்டினால், குனியா போரில் வெல்ல பயன்படுத்திய தெர்மோமீட்டர் ஆயுதம் பரிசாக அனுப்பப்படும்.

Print Friendly
பகிர்ந்து கொள்ள

1 thought on “சிக்கன்குனியாவின் நன்மைகள்”

  1. கண்ணுக்கு தெரியாத தீவிரவாதிகளை எதிர்கொண்டு போராடி வெற்றி கொண்ட வீரனின் மகிழ்ச்சியை நீங்கள் நகைச்சுவைபொங்க பகிர்ந்தது பலே!!இந்த invisible enemy ஐ எப்படி ஒழிப்பது? இது அரசும் பொது மக்களும் சேர்ந்து போராடவேண்டிய முக்கிய விடயம்.ஆனால் நமது மத்திய அரசு எல்லை தாண்டிய தீவிரவாத நிதிக்கு ஒதுக்கியது 17லட்சம்கோடி!!!பொதுசுகாரத்திற்கு ஒதுக்கியது சுமார் பத்தாயிரம்கோடிதான்!!!நம் பங்கு என்ன?நம் வீட்டைசுற்றி தண்ணீர் தேங்கும்பூந்தொட்டி, தேங்காய்மட்டைபோன்றவற்றை தவிர்த்தால் இந்த தீவிரவாதிகளை அடியோடு ஒழித்துவிடலாம்.அனைவரும் கைகோர்ப்போம்.

Leave a Reply