மகளின் பாசம்; தாயின் அன்பு – அகநானூறு பாடல் 60

2500  ஆண்டுகள் முந்திய தமிழ் நாகரீகம் காட்டும் உறவுகள் 

மீனவக் குடும்பம். அம்மா, அப்பா, ஒரு மகள்.

வேலைக்கு போற அப்பாவுக்கு மகளே சாப்பாடு செஞ்சு அனுப்புகிறாள்.

உப்பை வித்து அரசி வாங்கறா.

அதை, குழைய வெந்து, அது கூட பிசைய புளிக் குழம்பு செய்கிறாள்.

அயிரை மீன் போட்ட புளிக் குழம்பு.

அதோட நிக்கல அவளோட தந்தை பாசம்.

இருக்கறதிலேயே பெரிய துண்டா எடுத்து மேல வச்சு அனுப்பறா.

திறந்து பாக்கற அப்பாவுக்கு எவ்வளவு பெருமிதமா இருக்கும்?

தொழிலொடு வைகிய தந்தைக்கு

உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு

அயிலை துழந்த அம் புளிச் சொரிந்து

கொழு மீன் தடியொடு குறுமகள் கொடுக்கும்

(வைகிய – போன; மூரல் – சமைத்த உணவு; நொடை – மாற்று; தடி – துண்டு)

மதியம் அவள் தன் friends கூட மணல்லே விளையாடப் போறா. காற்று அடித்து மேடடித்த கடற்கரை.

மண்ணுலே சிலை செஞ்சு விளையாடறாங்க.

“போதும். வீட்டுக்கு வா. வெய்யில்ல ரொம்ப நேரம் நின்னா கருத்துறப் போற” அம்மாவின் கோபம். நிறைந்த கண்டிப்பு.

ஊதை ஈட்டிய உயர் மணல் அடை கரை

கோதை ஆயமொடு வண்டல் தைஇ

ஓரை ஆடினும் “உயங்கும் நின் ஒளி” எனக்

கொன்னும் சிவப்போள் காணின்  

(ஊதை – காற்று; கோதை – மாலை ; ஆயம் – தோழியர்; ஓரை – ஒரு விளையாட்டு உயங்கும் – வருந்தும் (அ) குறையும்  )

இருட்டுல சிரிச்சா மட்டுமே தெரியற கருப்புலே இருந்த என் விருதுநகர் collegemate ஒருத்தன் ஊருக்கு இரயிலில் வந்து இறங்கும் போது, அவனை கூட்டிட்டு போக வர அவன் அம்மா எப்போதும் கேட்ட முதல் கேள்வி:

“ஏண்டா இப்படி கருத்து போய்ட்டே? Madras வெய்யில்லே ஊர் சுத்தறையா?”

Print Friendly
பகிர்ந்து கொள்ள

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *