2017- டாப்-10 உணவகங்கள்

கோடிக்கணக்கான உலகத் தமிழர்களின் பேராதரவைப் பெறப்போகும் வாகையடித் திடல் இணைய இதழின் சார்பாக வருடா வருடம் டாப்-10 விருதுகள் வழங்க ஆசை.

முதலாவதாக…

வேறென்ன சாப்பாடுதான் 😊.

  1. ப்ராமின்ஸ் கபே – பெங்களூர்.

பழம் பெருமை பேசும் வீணா ஸ்டோர்ஸ், பலால், வித்யார்த்தி பவன் என்று எல்லா இடத்திலும் சாப்பிட்டதில், கொஞ்சம் தேர்வது இது ஒன்றுதான். சட்னியும், அதில் முங்கி மிதக்கும் வடையும் உன்னதச் சுவை.

  1. சட்னிஸ் – ஹைதராபாத்.

நெய்யிலும் பொடியிலும் புரட்டிய குண்டூர் இட்லியும், இளம் தேங்காய் சட்னியும் அருமை.

  1. பிராட்வே – HSR லே-அவுட், பெங்களூர்

வெஜிடேரியன் சூஷி (Sushi), மூங்கில் பிரியாணி என்று புது மாதிரியான உணவு. மசாலா குறைவான பிரியாணி – காய்கறிகளின் வாசத்தில் நேர்த்தி.

  1. முருகன் இட்லி கடை – வேலூர் அருகில்

பல கிளைகள் இருந்தாலும், இந்த இடத்தின் சுவை வித்தியாசமாக இருக்கிறது. சிறிய வெங்காய பொடி ஊத்தப்பமும், சர்க்கரைப் பொங்கலும் அவசியம் சாப்பிட வேண்டியவை.

  1. சதர்ன் ஸ்பைஸ் (Southern Spice) – தாஜ் கோரமண்டல் – சென்னை.

மதிய உணவு. ஒரு மூன்று மணி நேரம் தேவைப்படும். சிறிய பழத் தோசையும், சேவையும், சூழலும் – ரசித்து புசிக்க வேண்டும்.

நட்சத்திர ஹோட்டல்களில் பொதுவாக உணவு சுமாராக இருக்கும். இது ஒரு விதி விலக்கு.

  1. கோலம் – நியூ டவுன், கனேடிகட் – அமெரிக்கா

இது என் மனைவியின் தம்பி நடத்தும் உணவகம் என்பது காரணமல்ல.

நம்புங்கள்.

பங்ககளாதேஷ் கிழவர் ஒருவர் செய்யும் சில்லி சீஸ் நான் மென்மை. மெக்சிகோ நகரத்தில் இருந்து வந்துள்ள தாமஸ் என்ற பையன் செய்யும் அவியல், திருநெல்வேலி அவியலின் சுவைக்கு அருகில்.

  1. குயிலோன் (Quilon) – St. James Court, லண்டன்

ஒரு குளிரான மாலையில், வெளியே பனி மழை பெய்து கொண்டிருக்க, மென்மையான கர்னாடிக் இசையின் நடுவே, காரமான மிளகு ரசமும், பொடி இட்லியும் சுவர்க்கமாய் இருந்தது.

  1. சங்கீதா – அசோக் நகர்

புதுக் கிளை. குழிப் பணியாரம் அருமை.

  1. சாய் சங்கீத் – சென்னை

ஹைவே ரோட்டில் கூட்டம் என்னவோ A2B சென்றாலும், சுவையான உணவு இங்குதான். ராகிப் பூரி, சாமைப் பொங்கல், பனங்கற்கண்டு பால் என்று வித்தியாசமான உணவுகள்.

  1. நெல்லை ஜானகிராம். –வேறு எங்கும் கிளைகள் இல்லை

காலையில் பொடியுடன் இட்லியும், பொங்கலும், காபியும்.

இலையில் பொடி வகைகளுடன் மதிய உணவு.

இரவில் புட்டு – மூன்று வகை – கோதுமை, அரிசி, ராகி.

காலை, மாலை, இரவு உணவுகள் பலவற்றிலும் பல வருடங்களாக ஒரே சுவையுடன் இருக்கும் ஜானகிராம் 2017-ன் டாப்-10 உணவகம்.

Print Friendly, PDF & Email
பகிர்ந்து கொள்ள